திங்கள், 15 பிப்ரவரி, 2010

காதலர் தினம்

வழக்கம் போல காதலர் தினம் நேற்று கொண்டாட பட்டது. எனக்கு தெரிஞ்சு சென்னை ல ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. இன்று செய்தி தாள் பாதாப்போ, ஒன்னும் பெருசா சென்னை நடக்கல . நான் எழுத வந்தத விட்டு வேற ஏதோ சொலிட்டு இருக்கேன். நேற்று ss music ல ஒரு ப்ரோக்ராம் telecast பண்ணான் . பேரு தெரியல. பசங்களும் பொண்ணுகளும் மாத்தி மாத்தி குத்தம் சொல்லிட்டு இருந்தாங்க..

வழக்கம் போல பசங்க சொல்லற ஒரே statement - காசு இருந்தா தான் பொண்ணுக நாமல்ல கவனிக்குமாம். நானும் 5 நிமிஷம் தொடர்ந்து பாத்தேன். சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் சொல்ற ஒரே comment - லவ் பண்ண காசு வேணும்.

என்ன கருமம் இது.. காசு இருந்து பொண்ணு வருதுன , அதுக்கு பேரு வேற.. இது கூட தெரியமல இருக்கானுக நம்ம ஊரு பசங்க . அப்டியே ஒரு பொண்ணு, காசுக்காக உன் கூட இருக்குனு ஒரு பேச்சுக்கு வச்சுகிட்டாலும், அது கூட எப்படி இவன் இருப்பான்.

எனக்கு தெரிஞ்சத சொல்றேன். பொண்ணுக பசங்க கிட்ட சில basic qualification எதிர் பார்பாங்க..

1. dressing sense - பக்கி மாதிரி டிரஸ் இல்லாம , கொஞ்சம் decent dressing sense ரொம்ப முக்கியம். அதுக்காக van huesen pant, peter england shirt வாங்கிட்டு பைசா waste பண்ண சொல்லல. கொஞ்சம் decent டிரஸ் . அவ்ளோ தான்.

2. Humour sense - பொதுவா பொண்ணுக மட்டும் இல்ல, எல்லாருக்குமே கொஞ்சம் சிரிச்சு கொஞ்சம் நகைசுவை இருக்ற மாதிரி, sometimes, timing joke சொல்லி அசத்துற யாரையும் ரொம்ப பிடிக்கும். அதுக்காக பொண்ணுக கிட்ட ரொம்ப வழியாதிங்க..அது reverse effect ஆயிறும் .

3. problem solver - இது என்னமோ technical term நு நெனசுராந்திங்க. காலம் காலம்ம நம்ம தமிழ் சினிமா சொன்னது தான். but, கொஞ்சம் தப்பா சொல்லி குடுத்துடாங்க. problem வந்தா solve பண்ணற தெறமை. இது ரொம்ப முக்கியம். அதுக்காக எங்க தப்பு நடாந்தளும் அத solve பண்றேன் நு வந்து அசிங்க பட்ட நான் பொறுப்பு இல்ல.

4. Lies - பொய் சொல்றதுக்கும் அத maintain பண்றதுக்கும், உண்மைலே ரொம்ப தெறமை வேணும். அதுவும் பொண்ணுக ரசிக்கிற மாதிரி பொய் சொல்றது கொஞ்சம் கஷ்டம் தான். but, practice makes you perfect. நீங்க பொய் தான் சொல்றிங்க நு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சாலும் அத அழகா அந்த பொன்னே ரசிக்கிற சொல்றது இருக்கே, அதுக்கு கொஞ்சம் இல்ல ரொம்பவே training வேணும்.

5. Pet name - பொண்ணுகளுக்கு பொதுவா அவங்கள ஒரு pet name சொல்லி கூப்டறது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். decent + அழகா ஒரு petname சொல்லி கூபிடுங்க. இந்த technic கொஞ்சம் friendlya ஆனப்புறம் தான் work out ஆகும்.

எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் டேச்னிக்ஸ்லம் சொல்லிருக்கேன். இதெல்லாம் ட்ரை பண்ணியும் , ஒன்னும் வொர்க் அவுட் ஆகலேன, ஒன்னு அந்த பொண்ணு உங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிருச்சு. வொர்க் அவுட் ஆயிருச்சுன நீங்க சிக்கிடிங்க நு அர்த்தம்.

நான் எதுவும் மிஸ் பண்ணிருந்தா comments ல சொல்லுங்க.

1 கருத்து: