செவ்வாய், 27 ஜூலை, 2010

ரத்த தானம்

ரொம்ப நாட்களுக்கு பின் இப்போது தான் மறுபடி ப்ளாக் எழுத ஆரம்பிதுளேன். சரி விஷயத்துக்கு வருவோம். நேற்று ஆபீசில் வழக்கம் போல நம்ம கம்ப்யூட்டர் பொட்டிய தட்டி கிட்டு இருந்தேன். ஒரு போன் கால். பேசியது ஒரு பெண். அவளுடைய கணவன் பைக் விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்து treatment எடுத்து கொண்டு இருக்கிறார் என்றும் அவருடைய blood group ab negative வகையை சேர்ந்தது என்று கூறினார். என்னுடைய blood group அதே வகையை சேர்ந்தது என்பதால் எனக்கு phone செய்து உள்ளார். இதில் வருத்த பட வேண்டிய விஷயம் 3 இருக்கின்றன.

1. நான் 10 நாள் முன்னாடி தான் ரத்த தானம் செய்து விட்டு வந்தேன். அதனால், மூன்று மாதத்துக்கு ரத்தம் தானம் செய்ய முடியாது.

2. சில வகை ரத்த பிரிவுகள் ரொம்ப அரிது. உதாரணம் : AB negative, A negative, o negative, b negative. இந்த வகை ரத்த பிரிவுகள் கொண்டோர் மிக சிலரே. இந்த குரூப் ரத்த வகை கொண்ட ஆட்களை கண்டு பிடிப்பது ரொம்ப கடினம் .

3. ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை ரொம்ப குறைவு.

ஒரு சில விஷயத்தை நான் தெளிவு படுத்த விரும்பிகிறேன்.

1. உங்கள் ரத்தம் எந்த வகையை இருந்தாலும், 3 மாதத்துக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்யுங்கள். உங்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் மூன்று நாட்களுக்குள் தேவை படும் மற்றவருக்கு சென்று விடும். நம்ம வகை ரத்தம் ஊருல பாதி பேருக்கு இருக்கு என்று , அதுனால தேவை படாது என்று நீங்காலக முடிவு செய்ய வேண்டாம்.

2. இதுவரை நடந்த ஆராய்சிகளில் மனிதனால் உருவாக்க பட முடியாத திரவம் ரத்தம் மட்டும்.

உங்களுடைய ரத்த பிரிவை கீழே உள்ள வலைதளங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள். தேவை படுவோர் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக.

http://bharatbloodbank.com/

http://indianblooddonors.com/

LIONS CLUB போன்ற சேவை நிறுவங்களில் உங்களுடைய ரத்த பிரிவை பதிவு செய்து கொள்ளுங்கள்.

எனக்கு போன் செய்த பெண்ணுக்கு வலை தலத்தில் இருந்து ஒரு 10 பேர்களின் நம்பர் களை அவருக்கு sms அனுப்பினேன் . இப்போதைக்கு என்னால் அது மட்டுமே முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக